இந்திய அணி போராடி வென்றது

posted Nov 30, 2011, 9:27 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 30, 2011, 9:29 AM ]
முதலாவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிகொண்டது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று 29.11.2011 கட்டாக்கில் நடந்தது . முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து வெற்றி பெற 212 ரன்கள் தேவை என்ற கணக்கில் இந்தியா தன் பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பமே இந்தியாவுக்கு சோதனையாக இருந்தது. 15 ஓவர் முடிவதற்க்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. ஆனால் ரவீந்திர ஜடேஜாவும், ரோஹிந்த் சர்மாவும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்பு ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோர் 142 ஆக இருந்தபோது அவுட் ஆனார், அவரைத் தொடந்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். எனினும் 49 வது ஒவரில் இந்தியா 213 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
மேன் ஆஃப் த மேட்ச் விருது 72 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட ரோஹிந்த் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.