இலங்கை அணி ஐந்தாவது போட்டியிலும் தோல்வி 4-1 பாகிஸ்தான் தொடரை வென்றது

posted Nov 24, 2011, 7:25 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 24, 2011, 7:27 AM ]
அபுதாபியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இச்சுற்றுப் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 4-1 விகிதத்தில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றது. குமார் சங்கக்கார 78 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்திவ்ஸ்  61 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களில் சொஹைல் தன்வீர் 34 ஓட்டங்களுககு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து  வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் மிஸ்ப உல் ஹக் 66 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 61 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் ஜீவன் மெண்டிஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தில்ஹார பெர்னாண்டோ 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஏஞ்சலோ மத்திவ்ஸ் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்,  லஷித் மாலிங்க 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர். தொடரின் ஆட்டநாயகனாக சயிட் அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார்