ஆசிய கிண்ண கிரிக்கட்: கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி

posted Mar 19, 2012, 6:04 AM by Rasanayagam Vimalachandran
 
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐந்தாவது லீக் ஆட்டம் இன்று மிர்புரில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நசிர் ஜாம்ஷெட் 105 ஓட்டங்களும், முகமது ஹபிஸ் 112 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய 28 ஓட்டங்களும், யூனிஸ் கான் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவுதம் கம்பீர் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 52 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி சதத்தை கடந்து 183 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வீராட் கோஹ்லி புதிய சாதனை

வீராட் கோஹ்லி 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

2004 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 144 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது.

இத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை –பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 22 ம் திகதி நடைபெறவுள்ளது. 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

Comments