![]() இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்-ப்ரீத்தி திருமணம் சென்னையில் இன்று காலை கோலாகல உற்சாகத்துடன் நடைபெற்றது. அஸ்வின் தனது பள்ளிக்கூடத் தோழியான ப்ரீத்தியை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இந்தத் திருமண விழாவுக்கு, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்ற அசத்தல் துவக்கத்துடன் இன்று மண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்கிறார் அஸ்வின். காலையில் திருமணம் முடிந்த கையோடு இன்று மாலையே கோல்கத்தாவுக்குச் செல்கிறார் அஸ்வின். நாளை மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள அவர் இன்று மாலையே கோல்கத்தா செல்கிறார். |
விளையாட்டு >