சச்சினின் சாதனைகள்

posted Mar 16, 2012, 10:51 PM by Rasanayagam Vimalachandran
 
உலக கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் அளப்பரியது.

1989: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணியில் 16 வயது சிறுவனாக அறிமுகம்.

1990: இங்கிலாந்துக்கு எதிராக ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட் சதம்(119*).

1993: இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம்(சென்னை, இங்கிலாந்துக்கு எதிராக 165).

1994: தனது 79வது போட்டியில் முதல் ஒருநாள் சதம்(கொழும்புவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி, சிங்கர் கிண்ணம்).

1996: உலக கிண்ணப் போட்டியில் 2 சதம் உட்பட 523 ஓட்டங்கள்.

1997: ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இதழ் தெரிவு.

1998: சென்னை டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 155 ஓட்டங்கள் விளாசல். இந்தியா 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

2001: ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ஓட்டங்கள் கடந்து சாதனை. 100 விக்கெட்டும் கைப்பற்றினார்.

2002: சர் பிராட்மேனின் 29 சத சாதனையை சமன் செய்தார்(மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 117, போர்ட் ஆப் ஸ்பெயின்). அதே ஆண்டில் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் (இங்கிலாந்துக்கு எதிராக 193, லீட்ஸ்).

2003: ஐசிசி உலக கிண்ணப் போட்டியில் 673 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை.

2004: கவாஸ்கரின் 34 சத சாதனை சமன். எல்லா டெஸ்ட் அணிக்கு எதிராகவும் சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமை(1.கிர்ஸ்டன், 2.ஸ்டீவ் வாஹ்). ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர்.

2005: தனது 122வது டெஸ்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை மைல் கல்லை எட்டினார்.

2006: ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை கடந்தார் 

2007: 400வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்பு.

2008: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் 16,000 ஓட்டங்களை கடந்தார். பிரையன் லாராவின் 11,953 ஓட்டங்களை கடந்து டெஸ்ட் ஓட்டக் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

2009: ஒருநாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை கடந்து சாதனை.

2010: ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனை. அதிக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய வீரராகவும் சாதனை(ஸ்டீவ் வாஹை முந்தினார் 168).

2011: அதிக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமை(ஜெயசூரியாவை முந்தினார் 444).

2011: இந்திய அணி 2வது முறையாக உலக கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக(482) பெருமை.

2012: ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 100வது சர்வதேச சதம் விளாசி உலக சாதனை.

Comments