 இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் மகிளா ஜெயவர்த்தனே.முன்னாள் அணித்தலைவரான அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது 10 ஆயிரம் ஓட்டங்களை தவறவிட்டார். ஜெயவர்த்தனே முதல் இன்னிங்சில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் 16 ஓட்டங்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்து இருப்பார். ஆனால் துரதிரஷ்டவசமாக 16வது ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார். இதனால் ஜெயவர்த்தனே 10 ஆயிரம் ஓட்டத்தை தொட முடியாமல் போனது. 126 டெஸ்டில் விளையாடிய அவர் 9999 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 51.01 ஆகும். அதிகபட்சமாக 374 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 29 சதமும், 40 அரை சதமும் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 26ந் திகதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுப்பார். இதன்மூலம் இலங்கையின் முதல் வீரர் என்ற சாதனையை ஜெயவர்த்தனே படைப்பார். உலக அளவில் 9-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். தெண்டுல்கர்(15,183), டிராவிட்(13,094), பொண்டிங்(12, 656), காலிஸ்(12,036), லாரா(11,953), ஆலன் பார்டர்(11,174), ஸ்டீவ்வாக்(10,927), கவாஸ்கர்(10,122) ஆகியோர் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் ஆவார்கள். |