சென்னை ரைனோஸ் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

posted Jan 29, 2012, 9:10 AM by Rasanayagam Vimalachandran
செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், லீக் ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணி கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.

பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற(28.01.2012) இப்போட்டியில் நாணய சுழற்றசியில் வெற்றி பெற்ற கர்நாடகா புல்டோசர்ஸ் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் விக்ரநாத் 40 ஓட்டங்கையும், விஸ்னு 27 ஓட்டங்களையும், ஜீவா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

கர்நாடகா புல்டோசர்ஸ் அணியின் பந்து வீச்சில் சுதிர் மற்றும் அபிமன்யு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தொடர்ந்து 143 எனும் வெற்றி இலக்கை அடைய தொடரந்து களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் 19.4 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் ராஜீவ் 30 ஓட்டங்களையும், சந்ரா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

சென்னை ரைனோஸ் அணியின் பந்து வீச்சில் ஜீவா 2 விக்கெட்டுகளையும், சந்தனு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக சந்தனு தெரிவு செய்யப்பட்டார். 

Comments