இந்திய அணியின் மூத்த வீரர்கள் முன்பதாகவே அவுஸ்திரேலியா பயணம்

posted Dec 2, 2011, 9:31 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 2, 2011, 9:36 AM ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சச்சின், லட்சுண், டிராவிட் ஆகியோர் வரும் 8ம் திகதியே கிளம்புகின்றனர்.
அவுஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிசம்பர் மாதம் 26ம் திகதி துவங்குகிறது.

இதற்கு முன் வரும் டிசம்பர் மாதம் 15-16, 19-21ம் திகதிகளில் இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி இரு பிரிவுகளாக அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறாத மூத்த வீரர்கள் சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோருடன் இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, சகா உள்ளிட்டவர்கள் வரும் 8ம் திகதி மும்பையில் இருந்து கான்பெரா செல்கின்றனர்.

இது அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் சேவக், அஷ்வின் காம்பிர் உள்ளிட்டவர்கள் டிசம்பர் 12ம் திகதி இரண்டாவது பிரிவு வீரர்கள் சென்னையில் கிளம்புவார்கள். ஜாகிர் கான் உடற்தகுதியை நிரூபித்தால் செல்வார். கப்டன் தோனி எப்போது செல்வார் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் முதல் பிரிவு செல்லும் போது இவரும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.