இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது

posted Feb 19, 2012, 6:43 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 19, 2012, 6:44 PM ]
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த இன்றைய ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் மைக் ஹசி 59 ஓட்டங்களும், பாரஸ்ட் 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.