இந்தியா - அவுஸ்திரேலியா முதல் டெஸ்ட் முடிவை நோக்கி நகர்வு

posted Dec 28, 2011, 9:28 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 28, 2011, 9:28 AM ]
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 333 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. டிராவிட்(68) நேற்றைய ஸ்கோருடன் வெளியேறினார். லட்சுமண்(2), விராத் கோஹ்லி(11), தோனி(6), இஷாந்த் சர்மா(11), ஜாகிர்கான்(4) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். அஷ்வின்(31) ஆறுதல் தந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

51 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர்(5), கோவன்(8), மார்ஷ்(3) அதிர்ச்சி தந்தனர். மூவரையும் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். கிளார்க்(1), ஹாடின்(6), சிடில்(4) விரைவில் திரும்பினர். பொண்டிங் 60 ஓட்டங்கள் எடுத்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்து, 230 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஹசி(79), பட்டின்சன்(3) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.