நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி

posted Jan 28, 2012, 9:02 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 28, 2012, 9:03 AM ]
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 298 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது.

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 604 ஓட்டங்களும், இந்தியா 272 ஓட்டங்களும் எடுத்தன. அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்து 333 ரன்கள் பின்தங்கி இருந்தது.

படு தோல்வி: இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. இஷாந்த் சர்மா(2), சகா(3) மற்றும் ஜாகிர் கான்(15) என யாரும் நிலைக்கவில்லை.

அஷ்வின் 15 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 201 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

எனவே 4-0 என்ற கணக்கில் தொடரை வென்ற அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.