தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

posted Feb 25, 2012, 9:21 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 25, 2012, 9:21 AM ]
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஓருநாள் கிரிக்கட் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராப் நிகோல் 30 ஓட்டங்களும், மார்டின் குப்தில் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்கல்லம் 56 ஓட்டங்களும், வில்லியம்சன் 55 ஓட்டங்களும், மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது.

தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆம்லா 8 ஓட்டங்களும், ஸ்மித் 9 ஓட்டங்களும், கல்லிஸ் 13 ஓட்டங்களும், ஜீன் பால் டுமினி 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

டி வில்லியர்ஸ் சதத்தை கடந்து 106 ஓட்டங்களுடனும், பிளஸ்ஸிஸ் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.