தொழிநுட்பம்
அகன்ற திரையை பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்!
அடுத்து அடுத்து புதிய சகாப்தம் படைக்க ஆப்பிள் நிறுவனம் பல யுக்திகளை கையாண்டு கொண்டே இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கும் ஆப்பிள் நிறுவனம், இதில் 4.6 இஞ்ச் அகன்ற ஓஎல்இடி திரை வசதியை வழங்கும். இது போன்று இன்னும் பல புதிய தொழில் நுட்பங்களை, ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோனில் பயன்படு்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வெளியிட்ட ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போனில் 3.5 இஞ்ச் திரை வசதியை கொடுத்த ஆப்பிள் நிறுவனம், இனி வெளியிடு்ம் ஸ்மார்ட்போனில் பெரிய திரையை வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன், ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது பொருமை காக்க வேண்டி இருக்கிறது. |
குறைந்த விலையில் புதிய டேப்லட்: கூகுளின் புதிய திட்டம்
தொழில் நுட்ப உலகில் ரெக்கைகட்டி பறந்து கொண்டு இருக்கும் கூகுள் புதிய 7 இஞ்ச் நெக்சஸ் டேப்லட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுளின் இந்த டேப்லட் வெளியானால் மற்ற டேப்லட் மார்கெட்டில் பெரிய போட்டி நிலவும் என்று நிச்சயமாக கூறலாம். இந்த நெக்சஸ் டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதுவும் கின்டில் ஃபையர் டேப்லட்டையும் விட, கூகுள் வெளியிட இருக்கும் புதிய டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும். பெரிய பெரிய தொழில் நுட்பங்களை அசாத்தியமாக அள்ளி கொடுக்கும் கூகுள், இந்த டேப்லட் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. கூகுளின் இந்த புதிய டேப்லட் ரூ.7,478 விலையில் இருந்து ரூ.9,988 விலை வரையில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை கூகுள் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகார பூர்வமான தகல்களும் வெளியாகவில்லை. |
அடுத்து வருகிறது ஆப்பிள் ஐபேட் மினி!
இணையதளத்தில் வருகின்ற தகவல்களின்படி ஆப்பிள் வரும் மே மாதத்திற்கு முன் தனது ஐபேட் 3யை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த ஐபேட் மினியை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. கடந்த காலங்களில் ஆப்பிள் தனது 55 மில்லியன் ஐபேடுகளை இதுவரை விற்று இருக்கிறது. இந்த புதிய ஐபேட் மினி 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே தொடுதிரை வசதி கொண்டிருப்பதால் இதை விரல்களைக் கொண்டு இயக்குவது மிகவும் வசதியாக இருக்கும். இந்த ஐபேட் மினி அமேசான் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சாம்சங்கின் பாதுகாப்பு ஆவணம் கூறும் போது ஆப்பிள் தனது ஐபேட்4 மற்றும் ஐபேட்5 போன்றவற்றிற்கு ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்கு பதிலாக அமோலெட் டிஸ்ப்ளேயைப் பயன்படுத்த இருக்கிறது என்று கூறுகிறது. மேலும் இந்த ஐபேட் மினி டூவல் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் ஆப்பிளின் 5வது வெர்சன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயர் மினியாக இருந்தாலும் இது ஒரு அதிக சக்தி வாய்ந்த சாதனம் ஆகும். வெளி ஆடியோ சப்போர்ட்டிற்காக இந்த மினி 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கைக் கொண்டுள்ளது. எவ்வளவு வதந்திகள் வந்தாலும் ஐபேட் மினியைப் பற்றி இன்னும் ஆப்பிள் வாய் திறக்கவில்லை. மெய்யா பொய்யா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். |
Nokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்
Window தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத்த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ![]() 41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை பிடித்துக்கொள்ளலாம். |
ஆகாஷைத் தொடர்ந்து வரும் ஆகாஷ்-2 டேப்லெட்!
டேட்டாவின்ட் மற்றும் மத்திய அரசும் சேர்ந்து குறைந்த விலை ஆகாஷ் டேப்லெட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது டேப்லெட் உலகமே பரவசத்தில் மூழ்கியது. அடுத்ததாக ஆகாஷ் 2 டேப்லெட் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் உற்சாகம் அதிகரித்தது. ஏனெனில் ஆகாஷைவிட மேம்பட்ட தொழில் நுட்பத்தில் வரும் என்று நம்பப்பட்டது. ஆகாஷ் கனடாவைச் சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆகாஷ் 2 தயாரிப்பிலிருந்து டேட்டாவின்ட் விலகிவிட்டது. எனவே இந்த புதிய ஆகாஷ்2 டேப்லெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே, இந்தியர்களால் தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே இதை ஒரு இந்திய டேப்லெட் என்று அழைக்கலாம். ஆகாஷ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்குதளத்தைக் கொண்டிருந்தது. அதனால் ஆகாஷ் 2 ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் இதன் ரேம் 1ஜிபியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல் ஆகாஷ் டேப்லெட் 366 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட ஆர்ம் 11 ப்ராசஸரைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆகாஷ் 2 டேப்லெட் 700 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட எ8 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த புதிய டேப்லெட்டின் திரை 7 இன்ச் அளவில் இருக்கும். இந்த திரை 800 x 480 பிக்சல் ரிசலூசனை வழங்கும். அதுபோல் இந்த புதிய டேப்லெட் 3200 எம்எஎச் மின் திறனைக் கொண்டிருக்கும். இன்டர்நெட் வசதிக்காக ஆகாஷ் டேப்லெட் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகியவற்றை மட்டும் கொண்டிருந்தது. ஆனால் ஆகாஷ் 2 மேற்சொன்ன வசதிகளோடு 2ஜியைும் கொண்டிருக்கும். அதுபோல் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை ஆகாஷ் டேப்லெட்டில் பதிவிறக்கும் செய்யும் போது சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் அந்த பிரச்சினைகள் இந்த ஆகாஷ் 2 டேப்லெட்டில் இருக்காது என நம்பலாம். அதுபோல் இதன் பின்பக்க கேமராவைப் பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வீடியோ உரையாடலுக்காக முகப்பு கேமரா இந்த டேப்லெட்டில் உண்டு. ஆகாஷ் டேப்லெட்டில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இந்த புதிய டேப்லெட்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாம் களையப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய டேப்லெட் வரும் ஏப்ரலில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. |
கேலக்ஸி பீம் புரொஜெக்டருடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!
பல தொழில் நுட்ப சாகசங்களை செய்து வரும் சாம்சங், கேலக்ஸி பீம் தொழில் நுட்பத்தினை உருவாக்கி உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி பீம் லுமென்ஸ் புரொஜக்டர் தொழில் நுட்ப வசதியினை, ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் உருவாக்கி உள்ளது. இந்த கேலக்ஸி பீம் 15 லுமென்ஸ் புரொஜெக்டர் வசதியினை சுவர் போன்றவற்றில் பயன்படுத்தி மல்டிமீடியா கன்டன்டு வசதியினை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்களத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த அகன்ற திரையின் மூலம் 480 X 800 திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும். 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். சிறந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்வதற்காகவே இதில் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் வசதியையும் வழங்கும். இந்த புதிய சாம்சங் ஸ்மார்டபோன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும். |
ஒலி எழுப்பக்கூடிய கையுறை
இந்த கையுறைகளை அணிந்துகொண்டு கையை முன்னும் பின்னுமாக அசைக்கும்போது அவை கணணியின் உதவியுடன் ஒலி எழுப்புகின்றன. வன்கூவரிலுள்ள பிரித்தானிய பல்கலைக்கழத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கையுறையானது தற்போது 100 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து ஒலி எழுப்பக்கூடியவாறு காணப்படுகின்றது. இது இவ்வாறிருக்கையில் சிட்னி வெல்ஸ் என்ற விஞ்ஞானி இந்த கண்டுபிடிப்பு சாத்தியம் ஆகாது, மிகவும் கடினமானது என்றும் இச்செயற்பாடானது தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது மின்னஞ்சல் அனுப்புவது போன்ற செயற்பாடு எனவும் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகம்
நாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு ஜி.கே 1214-பி எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. மேலும் அந்த கிரகத்தில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த புதிய கோள் பூமியை விட 2.7 மடங்கு பெரியதாகவும், அதே நேரத்தில் 8 மடங்கு எடை அதிகமாகவும் உள்ளது. |
இலத்திரனியல் பற் தூரிகை அறிமுகம்
![]() அதன் அடிப்படையில் பற்களை விளக்க பயன்படும் பற்தூரிகைகள் தற்போது கற்றை தூரிகைகள் என்ற பெயருடன் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதாவது ஒருவர் பற்களை அன்றாடம் விளக்கும் விதத்தினை அறிந்து அதை சரியான முறைக்கு மாற்றுவதற்கு ஏற்றவாறு புளூடூத் இணைக்கப்பட்ட பற்தூரிகைகளே அவையாகும். இதனை ஸ்மார்ட் போன்களில் நிறுவப்பட்டிருக்கும் விசேட மென்பொருட்களின் உதவியுடன் அதன் திரையில் அவதானிக்க முடியும். இவ்வகை தூரிகைகள் பற்களின் சுகாதாரத்தன்மைகளையும் தெரியப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதுடன் குழந்தைகளின் பற்பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக அமையும். இதன் பெறுமதி 50 அமெரிக்க டொலர்கள் ஆகும். எனினும் பாவனைக்காலம் முடிந்ததும் அதன் தலைப்பகுதியை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். தலைப்பகுதியின் பெறுமதி 3 அமெரிக்க டொலர்கள் ஆகும். |
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் குறுக்குவிசைகள்
கணணியில் வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு குறுக்கு விசைகள்(Shortcut Keys) பயன்படுகின்றன. இதனை பழகிக் கொண்டால் வேலைகளை மிக சுலபமாக செய்து முடிக்கலாம். அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் குறுக்குவிசைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Key Purpose F1 - Used to open the help of Internet Explorer. F3 - Open the search window with in explorer. F4 - View the previously opened websites. F5 - Refresh the webpage. F6 - Used to select the address bar. F10 - Used to select the main menu bar. F11 - View webpage in Full Screen View (on/off). Print Screen - Used to capture the full screen. Esc - Used to stop any downloading page. Shortcut keys with the Combination of Ctrl key Key Purpose Ctrl+A - Used to select the full page of active screen. Ctrl+B - Used to open "Organize Favorites" windows to organize the list of favorites. Ctrl+F - Used to find any word or phrase in a page. Ctrl+H - Used to open the history of previously opened websites Ctrl+I - Used to open the list of favorites. Ctrl+E - Open the search window with in explorer. Ctrl+P - Used to send the print of active webpage. Ctrl+O - Used to move to new location (type new website name, document or folder to open in internet explorer). Ctrl+W - Used to close the active windows. Ctrl+N - Used to open the active webpage in new window. Ctrl+F4 - Used to close the active windows. Ctrl+R - Perform same task like F5 (Refresh the active webpage). Ctrl+Page Up - Used to move active page up. Ctrl+Page Down - Used to move active page down. Ctrl+Mouse Wheel - Used to change the font size of active page. Ctrl+Enter Press Ctrl+Enter - Windows will automatically add both "www" and ".com". Shortcut keys with the Combination of ALT key Key Purpose ALT+A - Used to open the list of your favorite. ALT+D - Go to address bar. ALT+H - Used to open internet explorer Help menu. ALT+E - Used to open internet explorer Edit menu. ALT+F - Used to open internet explorer File menu. ALT+T - Used to open internet explorer Tools menu. ALT+V - Used to open internet explorer View menu. ALT+F4 - Close the active internet explorer. ALT+Home - Move to your home page. ALT+LEFT - Used to move to Back page. ALT+RIGHT - Used to move to Forward page. |