இலத்திரனியல் பற் தூரிகை அறிமுகம்

posted Feb 19, 2012, 6:35 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 19, 2012, 6:36 PM ]
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு.

அதன் அடிப்படையில் பற்களை விளக்க பயன்படும் பற்தூரிகைகள் தற்போது கற்றை தூரிகைகள் என்ற பெயருடன் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

அதாவது ஒருவர் பற்களை அன்றாடம் விளக்கும் விதத்தினை அறிந்து அதை சரியான முறைக்கு மாற்றுவதற்கு ஏற்றவாறு புளூடூத் இணைக்கப்பட்ட பற்தூரிகைகளே அவையாகும்.

இதனை ஸ்மார்ட் போன்களில் நிறுவப்பட்டிருக்கும் விசேட மென்பொருட்களின் உதவியுடன் அதன் திரையில் அவதானிக்க முடியும். இவ்வகை தூரிகைகள் பற்களின் சுகாதாரத்தன்மைகளையும் தெரியப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதுடன் குழந்தைகளின் பற்பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக அமையும்.

இதன் பெறுமதி 50 அமெரிக்க டொலர்கள் ஆகும். எனினும் பாவனைக்காலம் முடிந்ததும் அதன் தலைப்பகுதியை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். தலைப்பகுதியின் பெறுமதி 3 அமெரிக்க டொலர்கள் ஆகும்.