அகன்ற திரையை பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்!

posted Mar 23, 2012, 11:27 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 23, 2012, 11:28 AM ]
அடுத்து அடுத்து புதிய சகாப்தம் படைக்க ஆப்பிள் நிறுவனம் பல யுக்திகளை கையாண்டு கொண்டே இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கும் ஆப்பிள் நிறுவனம், இதில் 4.6 இஞ்ச் அகன்ற ஓஎல்இடி திரை வசதியை வழங்கும்.


இது போன்று இன்னும் பல புதிய தொழில் நுட்பங்களை, ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோனில் பயன்படு்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு வெளியிட்ட ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போனில் 3.5 இஞ்ச் திரை வசதியை கொடுத்த ஆப்பிள் நிறுவனம், இனி வெளியிடு்ம் ஸ்மார்ட்போனில் பெரிய திரையை வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன், ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது பொருமை காக்க வேண்டி இருக்கிறது.
Comments