பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகம்

posted Feb 24, 2012, 9:20 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 24, 2012, 9:21 AM ]
நாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு ஜி.கே 1214-பி எனவும் பெயரிட்டுள்ளனர்.

இந்த கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. 
மேலும் அந்த கிரகத்தில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
இந்த புதிய கோள் பூமியை விட 2.7 மடங்கு பெரியதாகவும், அதே நேரத்தில் 8 மடங்கு எடை அதிகமாகவும் உள்ளது.