ஒலி எழுப்பக்கூடிய கையுறை

posted Feb 25, 2012, 9:10 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 25, 2012, 9:11 AM ]
இந்த கையுறைகளை அணிந்துகொண்டு கையை முன்னும் பின்னுமாக அசைக்கும்போது அவை கணணியின் உதவியுடன் ஒலி எழுப்புகின்றன. 

வன்கூவரிலுள்ள பிரித்தானிய பல்கலைக்கழத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கையுறையானது தற்போது 100 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து ஒலி எழுப்பக்கூடியவாறு காணப்படுகின்றது.

இது இவ்வாறிருக்கையில் சிட்னி வெல்ஸ் என்ற விஞ்ஞானி இந்த கண்டுபிடிப்பு சாத்தியம் ஆகாது, மிகவும் கடினமானது என்றும் இச்செயற்பாடானது தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது மின்னஞ்சல் அனுப்புவது போன்ற செயற்பாடு எனவும் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.