வீரமுனைக் கிராமத்துக்கான இணையத்தள நுழைவாயில் பண்டைத் தமிழின் பெருமையையும் தமிழ் பண்பாட்டின் தனித்துவத்தையும் உலகுக்கு எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்ற வீரமுனைக் கிராமம் அதன். வரலாற்றையும் தனித்துவத்தையும் உலக வலைப்பின்னலில் பறைசாற்ற www.veeramunai.com என்ற புதிய இணையத்தள நுழைவாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகின் தகவல் தொழில் நுட்ப புரட்சியில் எமது வீரமுனைக் கிராமமும் தனது அடியினை எடுத்து வைக்கின்றது. அதாவது இன்றைய தகவல் தொழில் நுட்பத்தினால் ஏற்பட்டிருக்கும் உலகமயமாதலுக்கு எமது கிராமமும் விதிவிலக்கானதல்ல என்பதை இவ் இணையத்தளம் உணர்த்தி நிற்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இணையத்தளம் என்பது தகவலை கொண்டு செல்வதில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த தகவல் பரிமாற்றத்தில் எமது வீரமுனைக் கிராமமும் www.veeramunai.com என்ற இணையத்தளம் ஊடாக சர்வதேச ரீதியாக தனது தகவலை கொண்டு செல்கின்றது என்பதனை பெருமையுடன் அறியத்தருகின்றோம். இவ் இணையத்தள ஆரம்பிப்பின் ஊடாக எமது கிராமம் தகவல் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்திருக்கின்றது. ஏனெனில் வீரமுனை வரலாற்றிலே வீரமுனைக்கென்று தனித்துவமான இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று இந்த இணையத்தளம் எமது ஊருக்கு என்று தனித்துவமாகவும் அதன் சிறப்பினையும் எடுத்தியம்புவதற்கென்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம்மைப் பற்றி இணையத்தள நுழைவாயில் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் இவ் இணையத்தளத்தை ஆரம்பிப்பதற்கான நோக்கமாக காணப்படுவது தான் சோழர்காலத்தில் தோற்றம் பெற்ற எமது கிராமத்தின் வரலாற்றையும் அதன் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் எடுத்து இயம்புவதோடு எமது கிராமத்தில் இடம் பெறும் சமய, கலாசார, கல்வி, விளையாட்டு,சமூக நிகழ்வுகளை உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பகிர்ந்து கொள்வதே ஆகும். எங்கள் கிராமம் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலின் காரணத்தால் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் எல்லாத்திசைக்கும் சிதறுண்டு அயல் கிராமங்களிலும் , புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றபோதும் நாங்கள் பிறந்து நடை பயின்று வாழ்ந்த கிராமத்தின் பெயரும், அதன் நினைவுகளும் அனைவர் மனங்களிருந்தும் அகன்றோ அன்றி மறைக்கப்பட்டோ விடக் கூடாது என்பதற்காக இவ்விணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மேலும் எம் மண்ணை விட்டு உறவுகளை பிரிந்து வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணாம் வீரமுனை என்பதை மனதில் நிலை நிறுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளோடு எமது கிராமத்தின் சின்னச் சின்ன விடயங்களை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொள்வதற்கேயாகும். நீங்களும் எம்முடன் இணையலாம் இலவச துணை இணைய நுழைவு முகவரி வீரமுனையில் உள்ள பொது இடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் எமது இணையத்தளத்தில் துணை இணையத்தளநுழைவு முகவரியும் (sub domain Eg;school name.veeramunai.com) தனிப்பட்ட இணையப் பக்கங்களும் வழங்க தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக இணையக்குழுவுடன் நேரில் தொடர்பு கொள்ளவும். எமது இணையத்தளத்தில் ஏதாவது பொருத்தமற்ற விடயங்கள், பிழையான தகவல்கள், ஒரு தனிநபருடைய அல்லது நிறுவனத்தினுயை நன்மதிப்பை பாதிக்க கூடிய தகவல்கள் உள்ளடக்கப்படாதிருக்க மிகுந்த கவனம் எடுக்கின்றோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவ்வாறு தகவல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் info@veeramunai.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்மந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பிரசுரிக்கப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் முதலியவை பொதுவாக எமது தளத்தில் பதிவு செய்தவர்களுடையதாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பியவர்களுடையதாகவோ இருக்கும். உங்கள் நிகழ்வுகளும் இணையத்தளத்தை அலங்கரிக்க உமது வீட்டில் இடம் பெறும் பிறந்த தின, திருமண, மரண, பிற அறிவித்தல்கள் மற்றும் கட்டுரைகள், கவிதைகள் எமது இணையத்தளத்தில் அலங்கரிக்க விரும்பினால் info@veeramunai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் அல்லது எமது இணையத்தள குழுவினரோடு (Web Team) தொடர்பு கொள்ளுங்கள். அத்துடன் பிரசுரிக்கப்படும் தகவல்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படாத வகையில் பாதுகாக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம். மேலும் எமது இணையத்தளமானது பிரதான தகவல் தளம் மாத்திரமே செய்தித்தளம் அல்ல என்பதையும் இதில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே பிரசுரிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க. |