கதம்பம்
கையடக்க தொலைபேசிப் பாவனையால் புற்று நோய் ஏற்படும் அபாயம்
இன்று விதமான விதமான வடிவங்களில் கைத் தொலை வந்து கொண்டிருக்க அப் பாவனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தம் விதமாக அண்மையில் ஜக்கிய நாடுகள் சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை காணப்படுகின்றது. அவ் அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதானது அதிகரித்த கையடக்க தொலைபேசிப் பாவனையின் மூலம் மூளையில் புற்று நோய் ஏற்படுவற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. |
உங்கள் Mobile இல் தற்போது Opera Mini ஐ பாவித்து தமிழில் வாசிக்க முடியும்
01] Opera Mini உடைய Address bar ல் "opera:config" என டைப்செய்து ok யை சொடுக்கவும். 02] பிற்பாடு கிடைக்கும் திரையில் "use bitmap fonts for complex scripts" க்கு yes தெரிவுசெய்து save பண்ணவும். 03] இப்பொழுது உங்களது Opera Mini யை restart செய்தவுடன் அது தமிழ் Unicode எழுத்துக்களை சரியாக வாசிக்க உதவும். Visit http://www.opera.com/mobile/download/ to download Opera Mini for your mobile... Some Most Used Nokia Phone Software Opera Mini seems to be a free software but you will be charged by your mobile operator for GPRS data usage according to your data plan! |
பறக்கும் கார் கண்டு பிடிப்பு
போக்குவரத்து துறையில் மற்றுமொரு பரிணாமம் பறக்கும் கார் கண்டு பிடிப்பு. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் செயல்படும் ‘டெர்ராபியூசியா டிரான்சிசன்’ எனும் நிறுவனம் பறக்கும் கார் கண்டு பிடித்து போக்குவரத்துத்துறையில் புதிய புரட்சியைப் படைக்க வித்திட்டுள்ளது. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது. இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விண்ணில் பறக்கும்போது இந்தக் கார் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதிக பட்சமாக ஒரே மூச்சில் 725 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பறக்கும் காரில் பயணம் செய்ய முடியும். இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். |
நீரில் கீ போட்டைக் கழுவலாம்
கிங்ஸ்டன் நிறுவனம் நீரில் கழுவிச் சுத்தம் செய்திடக் கூடிய கம்ப்யூட்டர் யு.எஸ்.பி / பி.எஸ்2 கீ போர்டு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கழுவக் கூடிய வசதி மட்டுமின்றி இது ஆண்ட்டி மைக்ரோபியல் ட்ரீட்மெண்ட்டுக்குப் பின் விற்பனை செய்யப்படுவதால் எந்த பாக்டீரியாவும் இதில் இருக்காது. இதனால் நீர் பட்டு பங்கஸ் பிடிப்பது, சிறிய மோல்டுகள் உருவாவது இல்லை.எனவே மருத்துவமனைகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இந்த கீ போர்டினைப் பயன்படுத்தலாம். அதே போல அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். 104 கீகளுடன் ஸ்டாண்டர்ட் கீ போர்டாக இது உள்ளது.
தற்போதைக்கு Amazon.com மற்றும் Kensington.com ஆகிய தளங்களின் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 39.99 டாலர். விரைவில் இந்தியாவிலும் இதனை எதிர்பார்க்கலாம்.
போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க் 640 ஜிபி 16 கிராம் எடை
ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான ஸீ கேட் நிறுவனம் அண்மையில் 640 ஜிபி கொள்ளளவு கொண்ட கையில் எடுத்துச் சென்ற பயன்படுத்தக் கூடிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை 16 கிராம் எடையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது Free agent Go என்ற வரிசையில் வந்துள்ளது. இதன் அகலம், உயரம், தடிமன் 80 x 130 x 12.5 மிமீ என்ற அளவில் உள்ளது. இதனால் 640 ஜிபி டேட்டாவை ஒருவர் ஜஸ்ட் லைக் தேட் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. 2 வகை போர்ட்டில் இதனை இணைக்கலாம்.விநாடிக்கு 480 எம்பி டேட்டா தகவல் பரிமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று கூட குறைய இருக்கலாம்.பேக் அப் சாப்ட்வேர் மற்றும் என்கிரிப்ஷன் வசதி உள்ளது.
இதிலேயே இதற்குத் தேவையான Free agent சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. இது இயங்காத போது மின் சக்தியைப் பயன்படுத்தாது. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் இயங்கும் இந்த ஹார்ட் டிஸ்க் மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. சில்வர் மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கிறது.இதற்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டி தரப்பட்டுள்ளது. |
அதிகரித்து வரும் வெப்பநிலை
இயற்கையின் அருட்கொடையை நாம் அளவிட முடியாது. எந்த ஒரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எல்லா உயிரிகளும் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரங்களை இயற்கை கொடுத்துள்ளது. பஞ்ச பூதங்களே இயற்கையின் உயிர் நாடிகள், இயற்கை மலை, மழை, காடு, கடல், பனி சிகரங்கள், நல்ல நீர் ஊற்றுக்கள், வெந்நீர் ஊற்றுக்கள், என ஒவ்வொன்றும் வியக்கத்தக்கவைதான். இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்தும் இயற்கையிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் இயற்கை அதிகம் கொடுக்கிறதே என்பதற்காக இயற்கையையே நாசப்படுத்த மனிதன் விழைகிறான். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய முரட்டுத்தனத்தால் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது. இன்று அதாவது 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பகுதியில் புல் பூண்டு ஏதும் முளைக்கவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் குன்றியும் பிறக்கின்றனர். இந்நிலை இப்படியென்றால், இங்கு மேற்கித்திய கலாச்சாரம் ஆடையில் மட்டுமின்றி, பழம் பெருமை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தை அழித்ததுடன், அதன் பெருமைவாய்ந்த இந்திய விவசாயத்தை வேரோடு அழிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக இந்திய தட்ப வெப்ப நிலையில் அரிய பல மூலிகைகள் வளரும் தன்மை கொண்டவை. இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தற்போது தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளை நிலங்கள் அனைத்தும் தரிசு காடுகளாக மாறி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் புலப்படும். கலாச்சாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட நம் தமிழகத்தின் 69 சதவீத நிலங்கள் இன்று தரிசாகவும், மனை நிலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன. கிராம மக்கள் தங்களின் பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். காரணம் வறுமைதான். வானம் பார்த்த பூமியாக இருக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு போகம் நெல், அடுத்து தானிய வகைகள், என பயிரிட்டு முன்பு விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் வீட்டைச்“ சுற்றியும், கண்மாய், ஏரிக்கரையிலும் மரங்களை நட்டு வைத்தனர். நீர்த் தேக்கங்களை மக்களே தூர்வாரி சீராக்கினர். நீர் வரும் கால்வாய்களை நன்கு பராமரித்தனர். ஏரிகளின் மாவட்டமாக செங்கல்பட்டு முன்பு விளங்கியது. தற்போது ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் ஏரியில்லா மாவட்டமாக ஆகும் நிலையில் உள்ளது. பின்தங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகளவு ஏரி குளங்களை அக்காலத்தில் ஏற்படுத்தி மழை நீரை சேமித்தனர். ஆனால் இன்றோ ஏரிகள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி மனை நிலங்களாக மாறிவிட்டன. விளை நிலங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன. இதனால் மழைநீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. மரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது வெறும் வாசகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. மரத்தை இழந்ததால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆற்றுப் படுகைகள் உவர் நிலமாக மாறிவிட்டன. அரிய பல மூலிகைகள் பல அழிந்துவிட்டன. விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், விஷமருந்துகள், களைக்கொல்லி போன்றவற்றால் விவசாய நிலங்கள் முற்றிலும் தரம் குன்றிவிட்டன. ஏற்கனவே வேலிக் கருவை, யூகலிப்டஸ் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி புவி வெப்பத்தை அதிகரித்தது போல், நிலங்கள் இந்த இரசாயன உரங்களால் புல் பூண்டு முளைக்காமல் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களைப் போல் மாறிவிட்டன. இதனால் பசுமை படர்ந்த நிலங்களிலிருந்து உற்பத்தியான ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. காற்றில் கரியமில வாயு அதிகரித்து புவி வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் கோடைவெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. இவை வெளியிடும் புகை, நீரால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் கோடையை கழித்தவர்கள் இன்று குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், மக்காத குப்பைகளை அதிகம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவை தமிழகத்தை வறட்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. இந்நிலை மாற அரசு விளைநிலங்களை கடுமையான சட்டங்கள் இயற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றாமல், மீண்டும் விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பதற்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி மரத்தை வளர்த்தால் புவி வெப்பத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபடலாம். ஆண்டுக்கொருமுறை நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும். |
சாதனை நாயகனுக்கு ஒரு சலாம்!!
முரளி கண்டி மைந்தனே! சுழல் பந்தின் மேதையே! கிரிக்கெட்டுக்கு புதுப்பொலிவு தந்த பகலவனே! இன்று உனக்கு இறுதி நாளாம் டெஸ்ட்டில்!! நீ விளையாடுவதில் இன்று இறுதி நாளாயிருக்கலாம் ஆனால் உன்னைப்பற்றி பேசப்போகின்ற டெஸ்ட் போட்டிகளுக்கு இன்றே முதல் நாள்!! துடுப்புக்கு பிரட்மன் என்றார்கள் இன்று மட்டும், நாளை தொடக்கம் பந்து என்றால் முரளி என்பார்கள் இருந்து பார்!! சுழற்ற்றுபவர்களுக்கு முன்னோடியே! விக்கெட் எண்ணிக்கையிலும் நீ முன்னோடி விட்டாய்!! உன் தூஸ்ராவில் மயங்காதோர் எத்தனை பேர்?? மாஸ்டர் batsman கூட உன் இறுதி டெஸ்ட்டில் கதிகலங்கினாரே!! உன்னில் குறை சொன்னோர்களுக்கு சிரித்துக்கொண்டே சாதித்துக்காட்டினாயே முரளி! உன்னில் பிழையில்லை வல்லோரை கண்டால் நலிந்தோருக்கு கண் குத்தத்தான் செய்யும் கண்டுக்காதே!! இது உனக்கு முடிவல்ல முரளி ஆரம்பமே!! நீ வீட்டிலிருந்து இனி போட்டிகளை ரசிப்பாய் ஆனால் நீ இல்லாத போட்டிகளை பார்க்க கூட மனம் பிரியப்படவில்லை!! நீ விளையாடிய காலத்தில் அதை பார்க்க நாம் வாழ்வு கொண்டோம் என்பதில் எத்தனை சந்தோசங்கள்!! நீ வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம் உனக்கு ரசிகர்களோ பல்லாயிரம்!! சொல்கிறார்கள் உனக்கு முப்பத்தெட்டாம்! உன் சிரிப்பிலே தெரிகிறது அது பதினெட்டென்று!! கிரிக்கெட்டில் ராஜ்ஜியம் ஆண்டுவிட்டாய் வாழ்க்கையில் மதியுடன் என்றென்றும் மலர்வுடன் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.. வாழ்த்துகிறேன் உன்னை பிரியும் சோகத்துடனே!! என் நினைவுள்ளவரை என்னோடு இருக்கும் உன் நினைவுகள்!! உன் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக...!! |
இந்தியாவின் முதல் வெப் பிரவுசர் ‘எபிக்’ அறிமுகம்
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.‘எபிக்’ எபிக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் பிரவுசர், பெங்களூருவில் உள்ள ஹிட்டன் ரிப்ளக்ஸ் என்று சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோஸில்லா பயர்பாக்சை அடிப்படையாகக் கொண்டு எபிக் வெப் பிரவுசர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து, ஹிட்டன் ரிப்ளெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இது சர்வதேச அளவில் முதன் முறையாக ஆன்டிவைரஸ் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிஸ்பைவேர் தொகுபபுகள் இசெட்டை அடிப்படையானது ஆகும் என்றும், பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப தீம்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதற்காக 1,500 தீம்கள் உள்ளதாகவும், இந்த எபிக் வெப் பிரவுசர் 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஒன் கிளிக் பிரைவேட் டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் மற்றும் நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய |