சாதனை நாயகனுக்கு ஒரு சலாம்!!

posted Aug 1, 2010, 3:15 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 1, 2010, 3:22 AM ]

முரளி
கண்டி மைந்தனே!
சுழல் பந்தின் மேதையே!
கிரிக்கெட்டுக்கு புதுப்பொலிவு
தந்த பகலவனே!
இன்று உனக்கு இறுதி நாளாம்
டெஸ்ட்டில்!!
நீ விளையாடுவதில்
இன்று இறுதி நாளாயிருக்கலாம் ஆனால்
உன்னைப்பற்றி பேசப்போகின்ற
டெஸ்ட் போட்டிகளுக்கு
இன்றே முதல் நாள்!!
துடுப்புக்கு பிரட்மன் என்றார்கள்
இன்று மட்டும்,
நாளை தொடக்கம்
பந்து என்றால் முரளி
என்பார்கள் இருந்து பார்!!

சுழற்ற்றுபவர்களுக்கு முன்னோடியே!
விக்கெட் எண்ணிக்கையிலும் நீ
முன்னோடி விட்டாய்!!
உன் தூஸ்ராவில் மயங்காதோர்
எத்தனை பேர்??
மாஸ்டர் batsman கூட
உன் இறுதி டெஸ்ட்டில்
கதிகலங்கினாரே!!

உன்னில் குறை சொன்னோர்களுக்கு
சிரித்துக்கொண்டே
சாதித்துக்காட்டினாயே முரளி!
உன்னில் பிழையில்லை
வல்லோரை கண்டால் நலிந்தோருக்கு
கண் குத்தத்தான் செய்யும்
கண்டுக்காதே!!


இது உனக்கு முடிவல்ல முரளி
ஆரம்பமே!!
நீ வீட்டிலிருந்து இனி
போட்டிகளை ரசிப்பாய் ஆனால்
நீ இல்லாத போட்டிகளை
பார்க்க கூட மனம்
பிரியப்படவில்லை!!

நீ விளையாடிய காலத்தில்
அதை பார்க்க
நாம் வாழ்வு கொண்டோம்
என்பதில் எத்தனை சந்தோசங்கள்!!

நீ வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம்
உனக்கு ரசிகர்களோ பல்லாயிரம்!!
சொல்கிறார்கள் உனக்கு
முப்பத்தெட்டாம்!
உன் சிரிப்பிலே தெரிகிறது அது
பதினெட்டென்று!!

கிரிக்கெட்டில் ராஜ்ஜியம்
ஆண்டுவிட்டாய்
வாழ்க்கையில் மதியுடன்
என்றென்றும் மலர்வுடன்
பல்லாண்டுகள் வாழ
வாழ்த்துக்கள்..
வாழ்த்துகிறேன்
உன்னை பிரியும் சோகத்துடனே!!


என் நினைவுள்ளவரை என்னோடு
இருக்கும் உன் நினைவுகள்!!
உன் கோடிக்கணக்கான ரசிகர்களில்
ஒருவனாக...!!