நீரில் கீ போட்டைக் கழுவலாம்

posted Sep 7, 2010, 6:29 AM by Sathiyaraj Kathiramalai
கிங்ஸ்டன் நிறுவனம் நீரில் கழுவிச் சுத்தம் செய்திடக் கூடிய கம்ப்யூட்டர் யு.எஸ்.பி / பி.எஸ்2 கீ போர்டு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கழுவக் கூடிய வசதி மட்டுமின்றி இது ஆண்ட்டி மைக்ரோபியல் ட்ரீட்மெண்ட்டுக்குப் பின் விற்பனை செய்யப்படுவதால் எந்த பாக்டீரியாவும் இதில் இருக்காது. இதனால் நீர் பட்டு பங்கஸ் பிடிப்பது, சிறிய மோல்டுகள் உருவாவது இல்லை.எனவே மருத்துவமனைகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இந்த கீ போர்டினைப் பயன்படுத்தலாம். அதே போல அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற கல்வி நிலையங்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். 104 கீகளுடன் ஸ்டாண்டர்ட் கீ போர்டாக இது உள்ளது.

தற்போதைக்கு Amazon.com  மற்றும் Kensington.com  ஆகிய தளங்களின் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 39.99 டாலர். விரைவில் இந்தியாவிலும் இதனை எதிர்பார்க்கலாம்.
போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க் 640 ஜிபி 16 கிராம் எடை

ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான ஸீ கேட் நிறுவனம் அண்மையில் 640 ஜிபி கொள்ளளவு கொண்ட கையில் எடுத்துச் சென்ற பயன்படுத்தக் கூடிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை 16 கிராம் எடையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது Free agent Go  என்ற வரிசையில் வந்துள்ளது. இதன் அகலம், உயரம், தடிமன் 80 x 130 x 12.5 மிமீ என்ற அளவில் உள்ளது. இதனால் 640 ஜிபி டேட்டாவை ஒருவர் ஜஸ்ட் லைக் தேட் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. 2 வகை போர்ட்டில் இதனை இணைக்கலாம்.விநாடிக்கு 480 எம்பி டேட்டா தகவல் பரிமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று கூட குறைய இருக்கலாம்.பேக் அப் சாப்ட்வேர் மற்றும் என்கிரிப்ஷன் வசதி உள்ளது.

இதிலேயே இதற்குத் தேவையான Free agent சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. இது இயங்காத போது மின் சக்தியைப் பயன்படுத்தாது. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் இயங்கும் இந்த ஹார்ட் டிஸ்க் மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. சில்வர் மற்றும் கருப்பு ஆகிய இரு வண்ணங்களில் இது கிடைக்கிறது.இதற்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டி தரப்பட்டுள்ளது.
Comments