மட்டக்களப்பில் சாதி அமைப்பு

மனித சமூகமானது கடந்த காலத்திலும் இன்றைய காலத்திலும் பல்வேறுவிதமான பிரிப்புக்களாகக் உள்ளது. இதில் சாதி, சமயம், இனம், மொழி, வாக்கம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் சாதி என்பது கிழக்காசிய நாடுகளின் சமூக அமைப்புக்களிலே நீங்க முடியாதவாறு பின்னிக்கிடக்கின்றது. இது அரசியல் உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் செயற்பாடுகளை இ;யங்கவைக்கின்றது. சாதி என்பது சமூகத்தில் இயங்கும் ஒரு அலகாகும். இக்குழுவில் இடம்பெறும் தகுதி பிறப்பால் அமையப்பெற்றதாகும். அதனால் ஒருசாதியில் பிறந்தவர் இன்னுமொரு சாதியினுள் இணையவும் முடியாது, பெயரை மாற்றிக்கொள்ளவும் முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டசாதிகளைச் சேர்ந்தவர் என்று ஒருவர் சொல்லிக்கொள்ளவும் முடியாது. ஆக சாதியென்பது பிறப்பின் அடிப்படையில் தோன்றி பொதுப்பெயரை உறுப்பினர்களிடையே கொண்டு அகமணம் செய்கின்ற ஒரு குழுவாகும்.

ஒருசமுகத்தில் பிறப்பால் வேறுபடுத்தப்பட்ட தனித்துவமான பண்பாட்டு அம்சங்களையும், நடத்தை முறைகளையும் கொண்ட மக்கள் பிரிவு காணப்பட்டால் அதனையும் சாதி எனலாம். இச்சொல்லானது "Cast" எனும் "Spaniya" சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதே இது வர்ணம், குலம்,  வாக்கம் போன்ற அர்த்தங்களை தருகின்றது. Spaniya வில் தோற்றம்பெற்றாலும் இது தென், தென்கிழக்காசிய நாடுகளில் அச்சாணியாக இருந்து ஆதிக்கம் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மனிதர்கள் மாறுதல் நிலை அல்லது தோன்றும் நிலை 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கணிப்பிடப்படுக்றது. விலங்குகளின் செயற்பாட்டில் இருந்து வேறுபட்டமைந்த வகையில் உழைப்புடனான வாளச்சியுடன் இயற்கையின் மேல் மனிதனின் அதிகாரம் வளர்ந்தது. அவன் தொடர்ந்து தனது கைகளினால் தனக்குத் தேவையான உணவைத் தேடுவதற்கும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் கல், எலும்புகளை உடைய கூரிய ஆயுதங்களையும் தயாரித்துக் கொண்டான்.

மனிதன் சமூதாயப்பிராணி ஆனால் அவன் இப்படி முதலிலிருந்து இருக்கவில்லை அவன் மனிதனான பிறகு சமூதாயப் பிராணியாக மாறினான். மனிதக் குரங்குகள் கும்பல் கும்பலாக வாழ்ந்துவருவதைப் போன்று மனிதனும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தான். இதனால் இயற்கையுடனும் விலங்குகளிடமும் எண்ணிலாப் போராட்டங்கள் நடத்தியதனால் அவர்கள் ஒற்றுமையின் இரகசியத்தையும் புரிந்திருப்பார்கள். இந்நிலையில் உயர்வு தாழ்வு இல்லை, மதமும் இல்லை, சொல்லப்போனால் தனிமனிதன் என்ற எண்ணமும்மில்லை இங்கு “நான்” என்பதை விட “நாம்” என்பதே இங்கு அதிகம்.   

மனித குலத்தில் தோன்றியதே சமூதாய வாழ்க்கையாகும்  இதனால் குழுச் சமுகத்தின் நிலை விரிவாக்கம் பெற்றது இதன் போது தேவைகள் அதிகமாயின இதனால் அத்தேவைகளை பூர்த்தி செய்ய தேவைகளுக்கு ஏற்ப பல்வேறுபட்ட தொழில்களையும் செய்து குழுக்களின் தேவைகளைச் பூர்த்தி செய்தனர். இதுவே அவர்களின் கடமைகளாகவும் மாறின இதன் அடிப்படையில் உழவர், மீன்பிடிப்பவர், வணிகர், தலைவர், ஆட்சியாளர்கள், போர்வீரர்கள் என தொழில்நிலையில்  சமூகங்கள் தோற்றம் பெற்றன. இதனை கிரேக்க அறிஞர் பிளட்டே விரிவாக விளக்கியுள்ளார்.

உருவ வகைகள் வழங்கிய மொழிகள், பொருட்கள், பண்பாடு, வாழ்க்கைமுறை, சமயநெறிகள், சமூக சாதிகள், அரசு என்பன பின்னர் தோன்றலாயின. சமூதாயங்கள் இனவழிபட்ட சமூதாயமாக மாறின இவர்கள் வாழ்ந்திருந்த பகுதிகள் காலப்போக்கில் பிரதேசங்களாகவும், நாடுகளாளவும் உருக் கொண்டன சங்க காலத்தே சமூதாயத்தில் பலதொழில்சார் சமூகங்கள் தோற்றம் பெற்றன. மேட்டுநிலத்தார் மந்தை வளர்ப்பும், மேசன் தொழிலையும், ஆற்றுப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெற்பயிரையும், கடற்கரை சார்ந்து வாழ்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலையும், மேற்கொன்டனர் தலைவன் கோ என அழைக்கப்பட்டான். கல்வி அறிவு அறம் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர் செம்மையுடையோராய் சமுகத்தில் மதிக்கப்பட்டனர்.  இவர்களே பண்டைய தமிழ் சமூகங்களில் அந்தணர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் புவியியல் நிலையும் காலச்சூழ்நிலையும் இவர்களது தொழிலை நிலைபெறச்செய்ததோடு அவர்கள் அரசாட்சிக்காலங்களில் தெழிலுக்கான மக்களாக அடையாளப்படுத்தினர். இவை ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தும் நோக்கங்களாக அமையவில்லை. இங்கு தெழில்ரீதியாக வேறுபட்டுக் காணப்பட்டார்களே தவிர கூறுபடுத்தப்படவில்லை கோவும் கொல்லனும் ஒரே அவையில் வீற்றிருந்த காலம் அந்தக்காலம் என்பர்;. ஆனால் இந்தியாவில் கி.மு 1500 ஆம் ஆண்டளவில் ஆரியர் வந்தபோது உடலிலும் நிறத்திலும் மொழியிலும் இந் நாட்டுமக்களிடம் இருந்து வேறுபட்டிருந்தனா. இவ் வேறுபாடுகளை பயன் படுத்தி இங்கு வாழந்;தோரை தஸ்யூக்கள் அல்லது தாசர்க்கள் என்று வேறுபடுத்திக் குறிப்பிடத் தொடங்கினா.; இது வேதகால தொடக்கத்தில் ஏறத்தாழ கி.மு 1200ல் நிகழ்ந்தது. 

இதன் பிறகு அவர்கள் மதத்தோடு தொடர்புடையதாக புரோகிதர் தொழிலையும், ஏனையோரை தமது தனித்தன்மையைக் காக்க அவர்கள் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து நான்கு பிரிவுகளை ஏற்படுத்தினர். அப்பிரிவுகளே பிரமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற பிரிவுகளாகும்   ஆரம்பத்தில் ஒவ் வொரு சாதியினருக்கும் கட்டுப்பாடு இல்லை அவர்கள் தொழிலிலும் மண உறவிலும் கட்டுப்பாடு இல்லை. இதனால் நான்கு சாதியினரிடையே ஏற்பட்ட கலப்புத் திருமணம் பலசாதிகள் தோன்ற ஆரம்பித்தனர். 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சாதியின் தோற்றம் இந்தியாவில் இருந்து வந்ததனால் உருவாகியதாக அவதானிக்கமுடியும், ஆனாலும் இலங்கையில் பண்டைய சமூகத்தவரான இயக்கர் நாகர் சமூகப் பிணைப்புடையோர் என்பதையும் இவர்களின் எச்சங்களே வேடர்கள் என ஆய்வாளர்கள் முடிவுறுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மரபு வழிச் சமூகங்களாக இயக்கர், நாகர், திமிலர், வேடர், முற்குகரும் இடம்பெறுகின்றனர். கலிங்கா, சிங்கர், வங்கர், போன்ற 3 பெயர்களைக் கொண்ட கூட்டுச் சமூகமே முற்குவர். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து மட்டக்களப்பில் குடியேறி பல கிராமங்ளை அமைத்ததாக கூறப்படுகிறது. இப்பிரதேசங்களில் முதல்மைக்குரியவர்களகாவும் காணப்படுகின்றனா.; என திருப்படைக்கல்வெட்டு;, சாதிதெய்வக்கல்வெடட்டு, முற்குவர் வன்னிமைக் என்பன இவர்களது வருகையைப்பற்றிக் கூறுகின்றன. கி.பி 4ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல்லவராட்சி தலையெடுத்து பிராமணர்கள் வர்ணாச்சிர தர்மத்தினை புகுத்தி தமிழர் பண்பாட்டு பாரம்பரியங்கள் இல்லாது ஒழிக்க அடித்தளமிட்டனர். சோழராட்சியில் அரசனின் நிர்வாக ஆலோசகர்களாக கோவில்களில் பாதுகாவலராக இருந்து நிலச் சொத்துக்களை பறித்து நிலவுடமையாளர்களாகினர். இந் நிலை மட்டக்களப்பிலும் இடம் பெறலாயின. இதனால் மட்டக்களப்பில் அவர்களின் ஆட்சிமுறைக்குள் சமூகப்பிரிவுகள் தோற்றம் பெறவேண்டியதாயிற்று.  இதனால் தமிழ் நாட்டில் இருந்து பலவகைப்பட்ட சாதிகளை அழைத்துவர வேண்டியதாயிற்று இதனால் ஈழத்தில் சோழராட்ச்சி தலைவர்களுக்கு தாம்பூலம் மடித்து கொடுக்க உரியவர்கள் இங்கு இல்லாமையினால் அதற்குரிய அடம்பையர் என்ற சாதியினர் இங்கு கொண்டுவரப்பட்டனர்.

 
மட்டக்களப்பில் வேறுபாடுகளுடைய சாதிப்பிரிவு தோற்றம் பெற்ற காலமாக சோழராட்சிக் காலத்தினை (957-1059) குறிப்பிடலாம். இக்காலத்தில் முன்னர் முக்கியமாக இரண்டு குடியேற்றங்கள் சிறைக்குடிகளை சம்மந்தப்படுத்தியதாக மட்டக்களப்பு மான்மிகம் குறிப்பிடுகிறது.  திருக்கோவில் ஆலைய நடைமுறைகளுக்கு வேளாளரும, அந்தணரும், சிறைக்குடிகளும் பின்னர் கி.பி 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க இளவரசி உலகநாச்சியால் கொக்கடடிச்சோலை தான்தோன்றீஸ்வரததுக்காக சில சிறைக்குடியினர் கொண்டுவரப்பட்டதாகவும். அதில் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட இவர்கள் கோவில் கடமைகளின் நிமித்தம் கொண்டுவரப்பட்டவர்களாக அறியக்கிடைக்கின்றது. வரலாற்றை பார்க்கின்றபோது சோழராட்சி மட்டக்களப்புக்கு சில நன்மைகளைத் தந்திருக்கின்றது.மட்டக்களப்பு அம்பாறை சமூக அமைப்பு முற்றிலும் மாறுபட்டதாகும் மேல்மட்டம் கீழ்மட்டம் என வறையறை செய்யப்பட்ட சமூகங்களிடையே பொதுவான சமுக உறவுமுறை பேணப்படுவதில்லை எனினும் இங்குள்ள நீண்டகால வரன்முறைகளை உள்ளடக்கிய வரலாற்றில் சமூகங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்காமல் பொதுவான நிகழ்வில் தங்கள் பங்களிப்பினூடாக நெறிதவறாத ஒற்றுமையை நிலை நிறுத்தி வாழ்ந்துள்ளமையை உறுதி செய்யப்பட்டதாகும. மட்டக்களப்பு சமூகங்கள் தொடர்ந்து ஒரு கட்டுக்கோப்புக்குள் இயங்க வேன்டிய அவசியம் உணரப்பட்டதால் கி.பி 14ம் நூற்றாண்டில் கலிங்க மாகோன் வறையறை செய்வதோடு அவர்களின் சமூகக் கடமைகளையும் நிலை நிறுத்தினா. இதனால் ஆலய நடைமுறைகளை தங்கள் பங்களிப்பினூடாக தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர்.

மட்டக்களப்பு சாதிப்பிரிவு பற்றி முதல் தகவல் தரும் நூல்மட்டக்களப்பு மான்மிகமாகும் இதுபோடிக்கல்வெட்டின் 22 சாதியினர் பற்றியும் அவர்கள் குலவிருதுகளும் கூறுகின்றது. அதன்படி சாதிகளும் குலவிருதுகளும் கீழே தரப்படுகின்றன.

கரையார்                                     தோணி விமலர்          மத்து
துலுக்கர்                                      தொப்பி வேதியர்         பூநூல்
காராளர்                                   கலப்பை        வண்ணார்      கல்
வேடுவர்                                   வில்லம்பு வாணிபர்       செக்கு
முற்குகர்                                  எழுத்தாணி            கடையர்         கூடை
கோயிலர்                                 கமலமலர் வேந்தர்         செங்கோல்
பண்டாரப்பிள்ளையார்     கைப்பிரம்பு        வள்ளுவர்    மேளம்
திமிலர்                                        பால்முட்டி        குயவர்    குடம்
சேணியர்                                   நூலச்சி         தட்டார்    குறடு
அமலர்                                        தேர்க்கொடி சாணார்   குத்து
அம்பட்டர்                                 கத்தரிக்கோல்        செட்டி             தராசு

இக்குலவிருதுகள்ஒவ்வொரு சாதியினருக்கும் இன்ன இன்ன தொழில் விதிக்கப்பட்டிருக்கின்றமையை காட்டி நிற்கின்றது மேலும இச் சாதியினருக்கு இருக்கும் 17 சிறைக்குடிகளையும்,  அவர்களின் தொழில் பற்றியும் கூறப்படுகின்றன.